யாழ் புங்குடுதீவில் சொகுசு பஸ்சுடன் மோதி விபத்து! ஒருவர் சிதறிப் பலி! வீடியோ
யாழ். புங்குடுதீவு மடத்துவெளி கடற்படை முகாம் அருகிலுள்ள பாலம் வழியாக பயணித்த சுற்றுலா பேருந்தும், புங்குடுதீவிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சாலை பாதுகாப்பை கடைபிடிப்போம். 06.05.2026
லட்சம் 25 ரூபாய் தருவதாக கூறி ஓய்வுபெற்ற சிப்பாயை ஏமாற்றிய இராணுவ லான்ஸ் கார்ப்பரல் கைது!
ஓய்வுபெற்ற இராணுவ வீரரின் கடனை அடைக்க ரூபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்குவதாக கூறி மோசடி செய்து லஞ்சம் பெற்ற இராணுவ லான்ஸ் கார்ப்பரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பண்டுலகம இராணுவ முகாமில் பணியாற்றிய சஜித் சமீர திசாநாயக்க என்ற இந்த சந்தேகநபர், உதவி தொகையை பெற முன்பணம் செலுத்த வேண்டும் என கூறி மூன்று தவணைகளில் ரூ. 129,600 தொகையை தனது வங்கி கணக்கில் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆவண கட்டணமாக கூடுதலாக ரூ. 13,457 லஞ்சம் கோரிய வேளையில்,...
இன்றைய (06.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண்...
யாழில் விஜய் இரசிகர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், வெற்றியீட்டியுள்ள நிலையில், விஜய்யின் வெற்றியை கொண்டாடப் போவதாக கூறிவிட்டு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாயில் இன்று (5) இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிர விஜய் ஆதரவாளரான குடும்பஸ்தர் ஒருவர், தமிழக தேர்தலில் விஜய் வெற்றியீட்டியுள்ளார், அதனால் மது அருந்தி கொண்டாடப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடுதல் நடத்திய போது, தனது தந்தையின் வீட்டில்...
முல்லைத்தீவில் ஏஎல் படிக்கும் மாணவியை குறி வைத்து இவர்கள் செய்த கேவலம்
முள்ளியவளையில் உயர்தர வகுப்பு மாணவியொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு இரு இளைஞர்கள் தப்பிச் சென்ற சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளைக்கு துவிச்சக்கர வண்டியில் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இலக்கத்தகடு இன்றி விலைகூடிய மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இரு இளைஞர்கள், மாணவி அணிந்திருந்த சுமார் முக்கால் பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதே பகுதிக்கு அண்மித்த பகுதியில் கடந்த வாரமும் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த...
மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி.
தங்கோட்டுவ, கடுகெந்த மஹவத்த பகுதியில் அமைந்துள்ள அரசாங்க பண்ணைக்கு சொந்தமான நிலமொன்றில், மணல் அகழ்ந்து கைவிடப்பட்ட நீர் நிறைந்திருந்த குழியில் மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்கோட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுகெந்த மஹவத்த பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய பிராங்க்ராஸ் கிரேஷன் பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரரான 37 வயதுடைய ஒலிவர் ரவீந்திர குமார் பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவர் உள்ளிட்ட நால்வர் நீர் நிறைந்த குழியில் மீன்பிடிப்பதற்காக வலை வீசியுள்ளனர். பின்னர் அன்று...
மூளையைக் கழற்றி வைத்து விட்டு தலைக்கு மசாஜ் செய்த கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம்! பரபரப்பு தகவல்கள் இதோ
இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பின்புறம் காணப்பட்ட நீண்ட கால வேம்பு ஒன்றை வைத்தியசாலை நிர்வாகம் வெட்டி அகற்றியுள்ளது. பல ஆண்டுகளாக துயரம் சுமந்து வரும் மக்களுக்குத் தன் தழையக் கைகளால் நிழல் தந்து தேற்றிய அந்தப் பெருவிருட்சம், இன்று அதிகாரத்தின் ஒற்றை 'றப்பர் முத்திரை கோரிக்கையால் சடலமாக வீழ்த்தப்பட்டுள்ளது. "ஆபத்து" என்ற போர்வையில், முறையான ஆய்வுகளோ அல்லது கிளைகளை மட்டும் தரிக்கும் மாற்றுத் திட்டங்களோ இன்றி, பசுமைப் படுகொலை அரங்கேறியிருக்கிறது; அந்த வேம்பு வெறும் மரம் மட்டுமல்ல, அருகில் இருந்த...
மட்டக்களப்பில் மாணவிகளை வேட்டையாடியவன் 700 மேற்பட்ட வீடியோக்களுடன் சிக்கியது எப்படி?
700 மாணவிகளின் எண்கள் மற்றும் தனிப்பட்ட படங்கள் கைப்பற்றப்பட்டன! டெலிகிராம் குழுவை பயன்படுத்தி, கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 24 வயதுடைய இளைஞர் ஒருவரை Criminal Investigation Department (CID) கைது செய்துள்ளது. அம்பாறை பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர், பிபில பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, சுமார் 700 இளம்...
யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அதி வேகமாகச் சென்ற இரண்டு இளைஞர்கள் பலி!
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து விவரம் இடம்: பருத்தித்துறை வீதி, கோப்பாய் நாவற்கட்டை பகுதி. நேரம்: இன்று (05.05.2026) அதிகாலை. சம்பவம்: கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்திலிருந்த வீட்டின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்கள் இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்கள்: சிவநேசன் குஜிந்தன் (22 வயது) - நெல்லியடி பகுதியைச் சேர்ந்தவர். ஏழுமலை துஷாந்தன் (24 வயது) -...
நெடுந்தீவு சென்ற அருச்சுனா பாதுகாப்பு உடை அணியாது படகுக்குள் தர்க்கம்! பயணிகள் அந்தரிப்பு!வீடியோ
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, படகுப் பயணத்தின் போது கட்டாயமாக அணிய வேண்டிய உயிர்காக்கும் அங்கியை அணிய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. படகுப் பயணத்தின் போது, பாதுகாப்பு நடைமுறைகளுக்காக அனைத்துப் பயணிகளும் உயிர்காக்கும் கவசத்தை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டது. எனக்கு நீந்தத் தெரியும்… மற்ற அனைத்துப் பயணிகளும் இதற்கு இணங்கிய நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும், தனக்கு நீந்தத் தெரியும் என்றும், எனவே தனக்கு அந்தக் கவசம் தேவையில்லை என்றும் கூறி அணிய மறுத்ததாகக் கூறப்படுகிறது.இதனால் சுமார் அரை மணித்தியாலத்துக்கு மேலாகப்...









