பதுளையில் கர்பிணித் தாய் ஸ்வர்ணமலாவும் சிசுவும் மரணம்!
மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் அவரின் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஹசலக, மினிப்பே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய எச். எம். ஸ்வர்ணமலா என்ற 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிசேரியன் மூலம் சிசு பிரசவிக்கப்பட்ட பின்னர், தாயின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக, அவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 06 ஆம் திகதி அதிகாலை 5.45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.பெண்ணின் வயிற்றில் இருந்த...
மர முந்திரிகை பொறுக்கச் சென்ற கல்லடியைச் சேர்ந்த குடும்பஸ்தர் காவலாளிகளால் சுட்டுக் கொலை!
வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் உள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வனாதவில்லுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நேற்று (09) அதிகாலை இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் கல்லடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கரதிவ் பகுதியில் உள்ள பெருந்தோட்ட நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான முந்திரித் தோட்டத்தில் முந்திரி பறிக்கச் சென்றபோது, அங்குள்ள காவலாளிகளிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர்கள் அவரைத் தாக்கி, ஏர் ரைபிள் எனச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கியால் சுட்டுக்...
இன்றைய (10.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 மிதுனம் இன்று எடுத்த...
அம்மா, நான் அவரைப் பயமுறுத்தவே இவ்வாறு செய்தேன், சாவதற்காக அல்ல! களுத்துறையில் காதலனை வெருட்ட முயன்ற 25 வயது செவ்வந்தி பரிதாபகரமாகப் பலி!
"அம்மா, நான் அவரைப் பயமுறுத்தவே இவ்வாறு செய்தேன், சாவதற்காக அல்ல" களுத்துறை மாவட்டம், மீவனபாலான பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 25 வயதுடைய ஷானிகா செவ்வந்தி என்ற இளம் யுவதி, தான் நீண்ட காலமாக காதலித்த நபருடன் விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருந்த நிலையிலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானசாலைக்கு தனது காதலருடன் செல்ல இந்த யுவதி ஆசைப்பட்டுள்ளார். எனினும், காதலர் இவரை அழைக்காமல் தனியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றமும், மன உளைச்சலும்...
கிளிநொச்சியில் 23 வயதான சாரங்கன் பரிதாபகரமாகப் பலி!
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில், 23 வயதுடைய இளைஞன் சிவகுருநாதன் சாரங்கன் அவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை தனது தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நகரைச் சேர்ந்த இந்த இளம் உயிரிழப்பு, அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் மனைவி, மகளுடன் ஆசிரியர் தவறான உறவு! கனடாவிலிருந்து கணவன் பொலிசாரிடம் புகார்!!
தனது மனைவி, 16 வயதான மகள் ஆகியோருடன் பிரபல யாழ் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் தவறான உறவில் ஈடுபடுவதாகவும் 16 வயதுச் சிறுமியான தனது மகளை குறித்த ஆசிரியர் பல தடவைகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அதற்கு மனைவியும் உடந்தையாக உள்ளதாகவும் கனடாவிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் பொலிசாரின் ஒன்லைன் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன் ஊடகங்களு்ககும் அவற்றை அனுப்பியுள்ளார். தனது மனைவிக்கு 39 வயது என்றும் தான் கனடா வந்து 5 வருடங்கள் ஆகின்றது எனவும் குறிப்பிட்ட குறித்த குடும்பஸ்தர் தனக்கு ஒரே ஓரு...
யாழ்ப்பாணத்தில் பிடிபட்டது சருகு புலி!! தொடர்ச்சியாக கால்நடைகளை வேட்டையாடி வந்துள்ளது! வீடியோ
யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. படத்தில் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் இந்த விலங்கு கொடிப் புலி அல்லது ஆனைப் புலி என்று அழைக்கப்படும் மீன்பிடி பூனை (Fishing Cat) ஆகும். (இதன் அறிவியல் பெயர்: Prionailurus viverrinus). சிங்கள மொழியில் இதனை 'ஹந்துன் திவ்யா' (Handun Diviya - හඳුන් දිවියා) என்று அழைப்பார்கள். இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி , நுணாவில் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்த...
பிரேசிலில் குற்றவாளிகளை தப்பிக்க வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட கிளி!
பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றுக்கு உதவியாக, பொலிஸ் சுற்றுவளைப்பு தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கப் பழகியிருந்த விநோதக் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. பியாயு (Piauí) மாகாணத்தில் உள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது, அங்கிருந்த வளர்ப்புக்கிளி சட்டென்று "அம்மா, போலீஸ் வந்துட்டாங்க!" என்று சத்தமாகக் கூச்சலிட்டு உள்ளே இருந்தவர்களை உஷார்படுத்த முயன்றுள்ளது. போலீசார் வருவதைக் கண்டதும் எச்சரிக்கும் வகையில் இந்த கிளிக்கு பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த அதிகாரிகள், அதை உடனடியாகக் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், இந்தச் சம்பவத்தின்...
இன்றைய (09.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். சக ஊழியர்களின் ஆதரவுடன் முன்னேற்றம் காண்பீர்கள். புதியதாக சொத்து ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்,...
செம்மணியில் கால் மடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு; 300 ஐத் தாண்டிய அவலம்!
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளாார். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் 3ஆம் கட்டத்தின் 19 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் யாழ்.நிதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்றைய அகழ்வில் இன்று புதிதாக 4 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டதோடு 16 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. அதனடிப்படையில் இன்றுவரை மொத்தமாக 302 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார். றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான...









