முள்ளியவளை வடக்கு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளியவளை பகுதியிலுள்ள பலசரக்கு கடையில் பொருட்கள் வாங்க சென்றிருந்த பெண்மணியின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அறுத்து தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இன்றையதினம் (28.04.2026) காலை 11.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் முதலில் கடைக்கு வந்து தீப்பெட்டி வாங்கி விட்டு கடைக்குள் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டுநின்ற பெண்மணியின் ஒரு பவுண் எடையுடைய தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்மணியால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் சந்தேகநபர்கள் தப்பிச்செல்லும் காட்சி பதிவாகியுள்ளதுடன், அவர்களை இனங்கண்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













