Home செய்திகள் யாழில் காரை அப்பளமாக்கிய ஜேசபி! கார் சாரதி படுகாயம்! ஜேசிபி சாரதி கைது!

யாழில் காரை அப்பளமாக்கிய ஜேசபி! கார் சாரதி படுகாயம்! ஜேசிபி சாரதி கைது!

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் இன்று காரும் ஜேசிபியும் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மருதனார்மடம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஜேசிபியும், யாழில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த காரும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், காரும் முழுமையாக சேதமடைந்துள்ளது.

படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

ஜேசிபியின் சாரதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply