யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து கொக்குவில் கிழக்கில் ஆடியபாதம் வீதியின் அருகில் உள்ள வீடு ஒன்றுக்கு பயணியைக் கொண்டு செல்வதற்காக 3 கிலோ மீற்றர் துமுாரத்திற்கும் குறைவாக உள்ள துாரத்திற்கு 1200 ரூபா அறிவிட்டுள்ளான் போதனா வைத்தியசாலையின் முன் ஆட்டோ தரிப்பிடத்தில் உள்ள ஆட்டோக்காரன்.
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் தந்தையை பார்வையிடுவதற்காக பிரான்சில் இருந்து 45 வயதான குடும்பஸ்தரும் அவரது மனைவியும் யாழ்ப்பாணம் வந்து ஆடியபாதம் வீதியில் அருகில் உள்ள தமக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்துள்ளார்கள். நேற்று முன்தினம் மதிய நேர சாப்பாட்டை நோயாளியான மனைவியின் தந்தைக்கு கொண்டு செல்வதற்கு அப்பகுதியில் நின்றிருந்த ஆட்டோவை அழைத்துச் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் குறித்த குடும்பஸ்தர். அதற்கு கூலியாக 500 ரூபாவை பெற்றுச் சென்றுள்ளார் குறித்த சாரதி. மனைவியின் தந்தையை பார்வையிட்டு வெளியே வந்த குடும்பஸ்தர் அங்கு ஆட்டோத் தரிப்பிடத்தில் தரித்து நின்ற ஆட்டோ ஒன்றை அழைத்த போது ஓடரின் படியே செல்வது வழமை என கூறியபடி இன்னொரு ஆட்டோ அவர் அருகில் வந்து நின்றது. அந்த ஆட்டோவில் தான் செல்லும் இடத்தைக் கூறிய பின் பேரம் பேசாது ஏறி இருநு்துள்ளார் குறித்த குடும்பஸ்தர். வெளிநாட்டிலிருநு்தா வந்தீர்கள்? எந்த நாடு என ஆட்டோச் சாரதி கதையை கொடுத்த வண்ணம் அவரை கொண்டு சென்று ஆட்டோ அவரது வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டதும் குறித்த ஆட்டோச் சாரதி 1200 ரூபா கூலியாகக் கேட்டதாகத் தெரியவருகின்றது.
கூலியைக் கேட்டு அதிர்ந்த குறித்த குடும்பஸ்தர் தான் ஏற்கனவே வைத்தியசாலைக்கு 500 ரூபா கொடுத்தே வந்ததாக கூறி தர்க்கப்பட்ட போது ஆட்டோச் சாரதி பச்சைத் துாசணத்தில் குறித்த குடும்பஸ்தரை ஏசத் தொடங்கியதுடன் அங்கு வந்த மனைவிக்கு முன் ” குட்டிகளுடன் படுத்தெழும்பி காசை துாக்கி வீச வந்து நிற்கின்றாய். எமக்கு 3 யூரோ பெறுமதிய இல்லாத காசைத் தர மறுக்கிறாயா? என்னுடன் ஆட்டோவில் வரும்போது குட்டிகளின் தொலைபேசி இலக்கம் கேட்டாய்தானே என மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களையும் கூறத் தொடங்கவே மனைவி குடும்பஸ்தர் தடுக்க தடுக்க குறித்த ஓட்டோச் சாரதிக்கு 1200 ரூபா பணத்தை கொடுத்து அனுப்பியதாகத் தெரியவருகின்றது.
குறித்த ஓட்டோச் சாரதியின் முழுமையான தகவல்களைப் பெறுவதற்கு அருகில் உள்ள உறவுக்காரின் வீட்டில் இருந்த கண்காணிப்புக் கமரைவை பரிசோதனை செய்ய முற்பட்ட போது அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் தங்களுக்கும் குறித்த ரவுடி ஆட்டோச்சாரதியால் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி அச்சப்பட்டுள்ளார். இது தொடர்பாக குறித்த குடும்பஸ்தர் யாழில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் சென்று செய்தி வெளியிடுமாறு கூறிய போது ”இப்படி நடப்பது புதிதல்ல. நீங்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும்் பிக்மியில் சென்றிருக்கலாம் என கூறி இவ்வாறான செய்திகள் வெளியிட்டால் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி வரும் என கூறி மறுப்பு தெரிவித்து அனுப்பியதாக குறித்த குடும்பஸ்தர் தனது நெருங்கிய நண்பர்களுக்கு கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














