முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டடைப்பகுதியில் காட்டுயானையின் அட்டகாசம் அதிகாரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வீடுகளில் நெல்மூடைகளை வைத்திருக்கமுடியாத நிலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் வீடு ஒன்றிற்குள் புகுந்த காட்டுயானை நெல்பைகளை உடுத்து நாசாம் செய்து உண்டுள்ளது.
இந்த நிலையில் இன்று(03.07.2026) அதிகாலை வேலை ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவு சங்கத்திற்குள் புகுந்த காட்டுயானை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட அறையின் கதவினை உடைத்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்த 6பை நெல்லினை எடுத்து உண்டு நாசப்படுத்தியுள்ளது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














