சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்!!
யாழ் அச்சுவேலியைச்சேர்ந்த தற்போது மட் ஏறாவூர் பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் கம்சன் 0766679439 எனும் பெயரையுடைய கீழே புகைப்படத்தில் உள்ள நபர் எனது மனைவியிடம் தவறான முறையில் பழகுவதற்கு முயற்சித்து வருகின்றார்.
இதுதொடர்பாக நான் இவரிடம் பலமுறை எச்சரித்தும், கடந்த 29/04/2026 அன்று DIG யிடமும், நேற்றைய தினம் (03) அன்று ஏறாவூர் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் முறையிட்டுள்ளேன்.
நான் இவருக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் என்மீது போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி என்னை நிரந்தரமாக சிறைக்கு அனுப்புவேன் எனவும் பலமுறை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இந்தச் சர்ச்சையால் நானும் எனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம், இரு தடவைகள் தற்கொ*லை செய்வதற்கும் எத்தனித்துள்ளோம்.
இதனால் எனது குழந்தைகள் முறையாக பாடசாலைக்கு செல்லவும் முடியவில்லை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ஊரவர்களிடம் வீண் பழியையும் சம்பாதித்து வருகிறேன்.
இதற்கு மேலும் ஒரு பொலீஸ் உத்தியோகத்தரை எதிர்த்து நிற்பதற்கு எனக்கு அரசியல் செல்வாக்கோ, பணபலமோ என்னிடம் இல்லை, இவரது அத்துமீறல்கள் இனிமேலும் தொடருமாயின் நான் குடும்பத்துடன் தற்கொ*லை செய்துகொள்வதைத்தவிர வேறுவழியில்லை. அவ்வாறு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் இதுவே எனது மரண வாக்குமூலமாகட்டும், இதை சுய நினைவுடன் எந்தவொரு வற்புறுத்தலுமின்றி ஆலய முன்றலிலிருந்து எழுதுகிறேன்,இதில் ஏதாவது போலியான குற்றச்சாட்டுகளை நான் சுமத்தியிருந்தால் இலங்கை பொலிஸ் திணைக்களம் என்மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறிக்கொள்கிறேன்.
நன்றி
-இராஜகுலசிங்கம் சந்திரகுமார்
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













