இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…
திருமலையில் 50 இலட்சத்திற்கு நடந்தது என்ன?
பிரபல வங்கி வாடிக்கையாளருக்கு நேர்ந்த கதி !
—————————————————————-
திருகோணமலையில் பிரபல வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் சுமார் 51 இலட்சம் ரூபாய் பணம் ஒரே நாளில் மாயமான விடயம் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாடு ஒன்றிற்கு செல்ல வங்கி மீதி காண்பிப்பதற்காக தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்தும், கடன்வாங்கியும் திருகோணமலையில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் புதிதாக தனது பெயரில் கணக்கைத் திறந்து 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் சுமார் 51 இலட்சம் வரை வைப்பிலிட்டிருந்தார்.
பின்னர் 15 புதன்கிழமை மாலை 6.19 மணியளவில் 2499025.00 ரூபாயும், 6.29 மணியளவில் 2619000.00 ரூபாயும் மாயமான நிலையில் கணக்கு மீதியாக 60 ரூபா 30 சதம் இருப்பதாக குறுஞ்செய்தி மூலம் தகவல் வர பதறிப்போன குறித்த பெண் வங்கியின் துரித இலக்கத்திற்கு அழைப்பை எடுத்து விடையத்தைக்கூற குறித்த தொகை இன்னுமொரு வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வங்கியின் பெயரையும் கூறியுள்ளார். தான் யாருக்கும் மாற்றம் செய்யவில்லை என பாதிக்கப்பட்ட பெண் கூறி மேலதிக தகவல்களை கேட்க அது தொடர்பில் தகவல்கள் வழங்கப்படவில்லை.
தொடர்ந்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று விடயத்தைக்கூற தொகை பெரிது என்பதால் எஸ்.சி.ஐ.பி இற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறும் தற்போது இரவாகிவிட்டதால் நாளை (16) செல்லுமாறும் தெரிவித்தனர்.
மறுநாள் (16) வியாழக்கிழமை குறித்த வங்கிக்கு சென்று விடயத்தை கூறி குறித்த பணம் மாற்றப்பட்டுள்ளதையும் தனது கணக்கு பார்க்க முடியாதவாறு முடங்கியுள்ளதாகவும் மாற்றம் செய்யப்பட்ட வங்கிக்கணக்கு இலக்கத்தை கேட்டபோது தர மறுத்ததாகவும் கடிதம் ஒன்றினை பெற்றுக்கொண்டு தலைமையகத்திற்கு அறிவிப்பதாகவும் கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டில் குறிப்பிடுவதற்கு கூட தரவில்லை எனவும் குறித்த இலக்கத்தை தந்திருந்தால் மாற்றப்பட்டுள்ள வங்கிக்கு சென்று அங்கிருந்து பணம் மாற்றப்படுவதை தடுத்திருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த பண மோசடி தொடர்பில் திருகோணமலை எஸ்.எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணினால் 16 வியாழக்கிழமை அன்று முறைப்பாடு செய்யப்பட்டு அது தொடர்பான விசாரணை இடம்பெற்று வருகிறது.
இதன்போது எனக்கு சில கேள்விகள் எழுகின்றன.
1.வாடிக்கையாளர் ஒருவர் தனது வங்கிக்கணக்கு பரிமாற்றங்கள் தொடர்பாக அறிந்து கொள்ள முடியாதா? அல்லது அது தொடர்பில் அறிவிக்கத்தான் கூடாதா? இதன்மூலம் அவருடைய உரிமை மீறப்படவில்லையா?
2.தனது வாடிக்கையாளரை பாதுகாக்க வங்கி ஏன் துரிதமாக செயற்படவில்லை?
3.குறித்த வங்கி சாதாரண வாடிக்கையாளருக்கு வழங்கும் மீளப்பெறும் தொகை மற்றும் பரிமாற்றம் செய்யும் தொகை முடிவிலியா?
4.வங்கியில் 2 இலட்சத்திற்கு மேல் வைப்பிலிடும்போதும், மீளப்பெறும்போதும் ஆயிரம் கேள்விகள் கேட்கின்ற வங்கி 50 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையை மாற்றம் செய்ய எவ்வாறு அனுமதித்தது?
5.மத்திய வங்கியானது பாதிக்கப்பட்ட குறித்த வங்கி வாடிக்கையாளரை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தது?
6..பொலிஸார் ஏன் துரிதமாக செயற்படவில்லை? போன்ற கேள்விகள் எழுகின்றன.
7.இதைவிட வாடிக்கையாளர் தொடர்பிலும் பல கேள்விகளும் எழுகின்றன.
உங்கள் வங்கியில் உள்ள பணத்திற்கு உங்களை அறியாமலே அல்லது உங்களாலேயே ஆபத்து வரக்கூடும் என்பதால் அவற்றுக்கான பாதுகாப்பை வங்கியில் உள்ள கட்டமைப்புகளை பயன்படுத்தி இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள்.
இந்த மோசடி எவ்வாறு நூதனமான முறையில் இடம்பெற்றது?
இதில் யார் யாருக்கெல்லாம் பங்கு இருக்கிறது?
என்பது தொடர்பாக அடுத்த பதிவில் பார்ப்போம்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













