Home செய்திகள் யாழில் பொலிசார் மறிக்கும் போது கீழே வீழ்ந்து பலியான தனுசன்! வீடியோ

யாழில் பொலிசார் மறிக்கும் போது கீழே வீழ்ந்து பலியான தனுசன்! வீடியோ

இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்த வேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதன்போது சபாவதிப்பிள்ளை வீதி, சுண்ணாகம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய தவேந்திரன் தினுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, போக்குவரத்துப் பொலிஸார் அவரை வழிமறித்தனர்.

இதன்போது குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர், தானாகவே கீழே சரிந்து விழுந்துள்ளார். பின்னர் அந்த இடத்திலேயே அசைவற்று காணப்பட்டார்.

அதன்பின்னர் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலமானது தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply