இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்
சேர்த்தவன், சேர்ந்தவன் முதற்கொண்டு நடு றோட்டில் நிற்கும் நிலை வரப்போகின்றது.
Harvesting investment படு வேகமாக யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.
சந்திக்கு சந்தி அதிக விலையில் வாடகைக்கு கட்டிடம் எடுத்து public. ஆகவே அவர்கள் நடமாடத் தொடங்கியுள்ளனர். 70 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு உரிமையாளர் கேட்ட கட்டிடத்தை போட்டிக்கு ஒரு இலட்சத்து 20. ஆயிரம் ரூபாய்க்கு எடுத்து நிறுவனம் திறக்கின்றனர் என்றால் பணம் விளையாடுது அவர்கள் கையில்.
இதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் எப்படி அனுமதி கொடுக்கின்றன என்பது தெரியவில்லை. இலங்கை மத்திய வங்கி எச்சிரிக்கை பண்ணி தடை செய்துள்ள நிறுவனங்கள் எப்படி இப்படி அதிக வீச்சில் இயங்க முடியும் என்பதும் தெரியவில்லை.
இந்த நிறுவனங்களை நடத்துபவர்கள் அந்தப் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு வேதனம் 5 இலட்சங்களுக்கு மேல் கொடுக்கப்படுகின்றது. இதனை செய்பவர்கள், இங்குள்ளவர்களை பயன்படுத்தி நாசுக்காக காய் நகர்த்துகின்றனர்.
உதாரணத்திற்கு ஆமைக்குஞ்சு harvesting investment pvt ltd. என்று நிறுவனம் இருக்கிறது என்றால், அவர்கள் இங்குள்ள ஒருவரை தெரிவு செய்வார்கள், அதில அனுசன் என்று ஒருவர் பொறுப்பேற்றால் Anushan Aamaikunchu harvesting investment pvt ltd என்று பதிந்து அனுசன் கையில் அதனை கொடுக்கின்றனர். 24 ஆயிரம் ரூபாய்க்கு எந்த குப்பையையும் கம்பனியாக பதிவு செய்யலாம். அனுசன் 5 மில்லியன் பெறுமதியான investor இனை சேர்த்தால், அனுசனுக்கு 5 இலட்சம் ரூபாய் வேதனம். Investor இற்கு மாதாந்தம் 166666 ரூபாய் ( 40% வட்டி கிடைக்குதாம்). அதிக சம்பளம், நிறுவன பொறுப்பாளர் என்ற குதூகலத்தில் அனுசன் நிலைமையின் தார்ப்பர்யம் அறியாமல் பாவப்பட்டவர்களின் காசுகளை இந்த நிறுவனத்தின் முதலீடு ஆக்குவார்.
இப்படியென்றால் இவர்கள் பெறும் ஒரு முதலீட்டில் இருந்து 60 – 70 % க்கு மேல் இலாபம் பார்க்கின்றனர். இப்படியாக விவசாயத்தில் கிடைக்கும் என்றால் விவசாயிகள் எல்லாம், இலங்கையில் எப்பவோ கோடீஸ்வரராக மாறியிருப்பார்கள். ஏமாத்தனும் என்றால் என்னவும் அடிச்சு விடலாம், அதை நம்பவும் ஆட்கள் இருக்கிறார்கள்.
இப்போது எல்லாம் அதிக கவர்ச்சிக்கு அடிமையாகின்றமையில் இப்படியான நிறுவனங்களை பற்றி ஆராயாமல் பலர் அதற்குள் அகப்படுகின்றனர்.
இப்போது எல்லாம் நல்லாத்தான் இருக்கும் பிசகும் போது, சேர்த்தவன் இங்குள்ள நிலை சரி, முதல் போட்டவன், நடு ரோட்டில், பெரிசா சுருட்டின மெயின் ஆள் காணாமல் போடுவான், கடல்ல தேடினாலும் கிடைக்காது, இது காலம் காலமாக நடக்கிற ஏமாத்துகாரர்களின் கதை இது.
வேலையில்லாத ஆட்களுக்கு கவர்ச்சியான சம்பளத்துடன் வேலை என்று இதன் உண்மையான தார்ப்பாரியம் அறியாமல் நீங்களும் சிக்கலில் மாட்டி, எமது சமூத்தின் பொருளாதார நிலையையும் சிக்கலுக்குள் மாட்டாதீர்கள். ஏனென்றால் வங்கிகளில் சேமிப்பில் வைத்திருக்கும் சில அப்பாவியான வயோதிபர்கள் உங்களின் சுவையான கதையை நம்பி தங்களி பணத்தை இவற்றில் போட்டு, ஒரு கட்டத்தில் ஒன்றிமில்லாமல் போய், அவர்களுக்கு ஒன்று ஆகி அந்த பாவத்தையும் சுமக்காதீர்கள்.
ஆராய்ந்த வகையில் அழகான பெண் பிள்ளைகள், கணவன் – மனைவி, வெளியூர் ஆட்கள் என்று இதன் promotion officer ஆக உள்ளனர்.
சிம்பிளா சொன்னா, இலங்கையில் வட்டி வீதம் 13 மிஞ்சி இல்லை, வியாபாரமோ, விவசாயமோ என்னவோ 16 இலிருந்து 30 எடுக்கிறதுக்கிடையில் உயிர் போய் வரும், இப்படியிருக்க சும்மா ஒருத்தன், 40% வட்டி தர எந்த சூழிநிலையிலும் முடியாது, அப்படியொரு பொருளதார நிலைமை எங்குமில்லை. முதலீட்டு திரும்பல் அட்டவணையில் கூட இந்த இது இல்லை.
40% வட்டியென்றால் அது முதலீட்டு நிறுவனமில்லை மோசடி நிறுவனம்.
நீ போட்ட பணம் மற்றொருவரின் பணத்திலிருந்து கொஞ்ச காலம் உனக்கு கூடுதல் வட்டி தருவார்கள், பணம் கிடைத்த ஆசையில் இலட்சங்களில் போட்ட நீ, வீடு காணியை விற்று கோடியில் போடுவாய். கோடிகள் பல அந்த கேடிகள் எஸ்கேப் ஆவார்கள், அப்போது தெரியும் உண்மை நிலைமை. அது வரை புரியாது, புரியப்போவதில்லை.
இது தொடர்பில் ஆளுநர், அரசாங்க அதிபர் கவனம் செலுத்தி இப்படியான நிறுவனங்கள் இங்கு காலூன்றுவதை தடுக்க வேண்டும்.
உள்ளுராட்சி மன்றங்கள் இதற்கான அனுமதி வழங்கலை தடை செய்ய வேண்டும், இது தொடர்பில் உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் கதைக்க வேண்டும். உடனடியாக செய்யாவிட்டால், இங்கு பலரது சேமிப்பு காணாமல் போய், பலர் நடுறோட்டில் நிற்பார்கள்.
குணசேகரன் சுரேன்-
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














