Home செய்திகள் யாழில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள், குண்டு மீட்பு!

யாழில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள், குண்டு மீட்பு!

யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் கு*ண்டு என்பன மீட்கப்பட்டதாகவும், இந்நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அதிகாரியின் கண்டி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வாள் மற்றும் கு*ண்டு என்பன கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் மீட்கப்பட்டன.

இந்நிலையில் இது குறித்து வாக்குமூலம் வழங்குவதள்காக அவர் கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply