கொழும்பு நாவலப் (Nawala) பகுதியில் சிங்களத் தொழிலதிபர் ஒருவரின் வாகனச் சாரதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவனை பொலிசார் தேடி வருவதாகத் தெரியவருகின்றது. பிரதாபன் கடந்த 10 வருடங்களாக தொழிலதிபரின் வாகனச் சாரதிகளில் ஒருவராக கடமையாற்றியுள்ளதுடன் தொழிலதிபரின் மகனான டுபாயில் பொறியியலாளராக உள்ளவரின் மனைவி மற்றும் பிள்ளையையும் பல்வேறு இடங்களுக்கு காரில் கொண்டு திரியும் சாரதியாகவும் பணியாற்றி வந்துள்ளான்.
தனது முதலாளியின் மனைவியான தற்போது 65 வயதுடைய பாட்டியுடன் 10 வருடங்களுக்கு மேலாக பிரதாபன் அந்தரங்கத் தொடர்பில் இருந்ததுடன் அவருடன் அந்தரங்கமாக இருந்த போது எடுத்த புகைப்படங்களையும் தனது போனில் பதிவு செய்து வைத்திருந்துள்ளான். அதே நேரம் பொறியியலாளரான தொழிலதிபரின் மகனின் 38 வயதான மனைவியுடனும் இவன் அந்தரங்கத் தொடர்பில் இருந்துள்ளதுடன் 14 வயதான பொறியியலாளரின் ஒரே ஒரு மகளையும் விட்டு வைக்கவில்லை எனத் தெரியவருகின்றது.
பிரதாபனுடன் பணியாற்றும் மற்றொரு வாகனச் சாரதியிடம் அகப்பட்ட பிரதாபனின் லீலைகள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தொழிலதிபரின் கவனத்திற் கொண்டு வரப்பட்டுள்ளது. இந் நிலையில் தற்போது பிரதாபன் தலைமறைவாகியுள்ளதாகவும் இரு மாதங்களாக அவன் எங்கே உள்ளான் எனத் தெரியவில்லை எனவும் அரியாலைப் பகுதியில் உள்ள பிரதாபனின் தாயார் அழுதழுது தெரிவித்துள்ளார். தனது மகனிடம் சிங்கள முதலாளியின் குடும்பம் நல்ல நம்பிக்கை வைத்திருப்பது அவரது ஏனைய சாரதிகளுக்கு பொறாமை எனவும் ஏனைய சாரதிகள் தனது மகனை சதி செய்து மாட்டியுள்ளார்கள் எனவும் புகைப்படங்கள் மற்றும் வீடியாக்களை AI மூலம் தயாரித்து முதலாளிக்கு காட்டியுள்ளார்கள் எனவும் இரு தடவைகள் இது தொடர்பாக தன்னிடம் கொழும்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் தாயார் கூறுகின்றார்.
தொழிலதிபர் மற்றும் அவரது மகன் உட்பட்டவர்களால் பிரதாபன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. பிரதாபனின் உறவுகளும் தொழிலதிபரும் பிரதாபன் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
பொறியியலாளரின் 14 வயதான மகளிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை வைத்தே பொலிசார் தற்போது பிரதாபனைத் தேடி வருவதாகத் தெரியவருகின்றது.
இதே வேளை தொழிலதிபரின் மனைவியான பாட்டியிடமிருந்து இலட்சக்கணக்கான பணம் மற்றும் நகைகளை பெற்று பிரதாபன் மலேசியா அல்லது இந்தோனேசியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றார்கள். பிரதாபனின் இச் செயற்பாட்டால் தொழிலதிபர் மற்றும் அவரது மகன் ஆகியோர் தமது மனைவிகளை விட்டுப் பிரிந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறிப்பு – பிரதாபனின் இந்தப் புகைப்படம் AI மூலமாக வடிவமைக்கப்பட்டே பதிவு செய்துள்ளோம்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














