படகில் தனியாக கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன களுதாவளை இளைஞன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் படகில் மீன் பிடிக்க சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று (25) திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல் முன்னெடுத்துக்கொண்டிருந்த மீனவர்களினால் மீட்கப்பட்டு களுதாவளைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை (23) மீனவர் ஒருவர் கடலுக்கு சென்று காண நிலையில் அப் பகுதி மீனவர்கள் பொதுமக்களால் தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வந்தது
சடலமாக மீட்கப்பட்டவர் மட்டு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த விஜயகுமார் விஜயகாந் என்ற 19 வயதுடைய இளைஞராவார்
கடந்த சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ள நிலையிலே காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















