Home செய்திகள் பழி வாங்கப்பட்டாரா யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா?

பழி வாங்கப்பட்டாரா யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா?

யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்று இரு மாதங்களுக்குள் போதைப்பொருள் (ஹெரோயின்) தொடர்பான வழக்குகளை விசாரித்து, ஒரு கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றவாளிகளுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை போன்ற அதிரடித் தீர்ப்புகளை வழங்கி வந்த மாண்புமிகு நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா இன்று மலையகம் பதுளைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு செல்வபுரத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்த ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை முடித்தார்.

2007ஆம் ஆண்டு நீதிச் சேவை அலுவலகராக நியமனம் பெற்று நீதிபதியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிவான் நீதிமன்றங்களிலும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற நீதியின் காவலன் மதிப்புக்குரிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஐயாவின் நேர்மையான, அதிரடியான தீர்ப்புக்கள் போன்றே இங்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்களும் அமைந்திருப்பதாக பரவலாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply