Home செய்திகள் இலங்கை செய்திகள் சற்று முன் அரியாலையில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் பலி!!

சற்று முன் அரியாலையில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் பலி!!

முள்ளிப்பகுதியில் ரயில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அப்பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி , இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த நிரோஷன் லக்மால் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில் , விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்ட காலம் கடமைக்கு திரும்பாது , இன்றைய தினம் மீண்டும் கடமைக்கு திரும்பிய வேளை பலாலி இராணுவ அதிகாரிகள் , நீண்ட காலம் கடமைக்கு திரும்பாதமை குறித்து , கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று விளக்கம் கொடுக்குமாறு பணித்த நிலையில் சிப்பாய் பலாலியில் இருந்து வெளியேறிய நிலையில் அரியாலை நெளுக்குளம் பகுதியில் புகையிரத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

May be an image of one or more people, train, railway and text that says "நாவற்குழியில் புகையிரதம் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை... 967 967 967"

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply