Home செய்திகள் மட்டு’வில் பாசமலர் திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம்!! அண்ணன் இறந்த துக்கம்! தங்கையும் பலி!

மட்டு’வில் பாசமலர் திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம்!! அண்ணன் இறந்த துக்கம்! தங்கையும் பலி!

மட்டக்களப்பு பகுதியில் பாசமலர் திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது களுவாஞ்சிக்குடிப் பகுதியைச் சொந்த இடமாகவும் நாவற்குடாவை வசிப்பிடாமாகவும் கொண்ட . மட்டக்களப்பு சிவானந்தா தேசியபாடசாலையின் பிரதி அதிபராக இருந்து ஓய்வு பெற்ற 62 வயதான சங்கரநாராஜணபிள்ளை மணிவண்ணன் என்பவர் கடந்த 15ம் திகதி திடீரென நோய்வாய்ப்பட்டு மரணமானார். இவர் இறந்த தகவல் கேட்டு மரண வீட்டுக்குச் சென்ற இவரது சகோதரியான ஏறாவூர் 5ம் குறிச்சியில் வசித்து வந்த பிரியதர்சினி பகீரதன் எனும் 57 வயதான குடும்பப் பெண் அங்கு மரணமடைந்துள்ளார். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply