யாழ் வலிகாமம் பகுதிியில் உள்ள பிரபல கோவில் ஒன்றின் 42 வயதான 3 பிள்ளைகளின் தாயான குருக்களின் மனைவி கனடாவில் இருந்து வந்த 65 வயதான சிவரட்ணம் எனும் மன்மதனுடன் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது. மனைவியைக் காணாது குறித்த குருக்ள் தேடத் தொடங்கிய போது அவரது தொலைபேசி வட்சப்பிற்கு மனைவியுடன் சிவரட்ணம் இருக்கும் புகைப்படம் வந்துள்ளது. இதனையடுத்து குறித்த கோவில் நிர்வாகத்திடம் குருக்கள் முறையிட்டு கதறியுள்ளார். தற்போது கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் அடியவர்கள் சிவரட்ணத்தை கொலை வெறியில் தேடி வருவதாகத் தெரியவருகின்றது.
சிவரட்ணம் குறித்த கோவில் திருவிழாவின் 3 வது திருவிழா உபயகாரன் எனவும் கனடாவில் வசித்து வரும் சிவரட்ணம் நீண்டகாலத்தின் முன்னரே தனது மனைவியை விட்டுப் பிரிந்து வேறு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். அதே பெண்ணை தனது கோவில் திருவிழாவுக்கும் கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக குறித்த 3ம் திருவிழாவை தனது அண்ணனான சிவரட்ணத்திடமிருந்து பறித்தெடுத்து தனக்கு தருமாறு அவரது தம்பி பலமுறை கோரியும் கோயில் நிர்வாகமும் குறித்த குருக்களும் அதற்கு உடன்படவில்லை எனவும் தெரியவருகின்றது. குருக்களுக்கு சிவரட்ணம் தனிப்பட்ட ரீதியில் நிதி உதவி புரிந்து வந்துள்ளார். அத்துடன் வேறு கலாச்சாரத்தில் வளர்ந்த சிவரட்ணத்தின் வைப்பாட்டிக்கும் குருக்கள் அவனது திருவிழாவின் போது தர்ப்பை அணிவித்து வந்திருந்தாக குற்றச்சாட்டுக்கள் அந் நேரத்தில் சுமத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சிவரட்ணம் பழைய கால ஆயுதக் குழு ஒன்றின் அங்கத்தவர் என்பதுடன் ரவுடித்தனம் மிக்கவர் எனவும் அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் நிலை எடுத்த காலத்தில் கனடாவுக்கு தப்பியோடியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவரட்ணத்துடன் தலைமறைவாகியுள்ள குருக்களின் மனைவிக்கு 3 பி்ள்ளைகள் என்பதுடன் மூத்த பெண் பிள்ளை பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவில் தற்போது கற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













