Home செய்திகள் இலங்கை செய்திகள் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற கோர விபத்து – இளைஞர் உயிரிழப்பு மூவர் படுகாயம்!

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற கோர விபத்து – இளைஞர் உயிரிழப்பு மூவர் படுகாயம்!

ல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதான வீதியில், குழந்தையேசு ஆலயத்திற்கு அருகில் நேற்று (25.07.2026) இடம்பெற்ற கோர மோட்டார் சைக்கிள் விபத்தில், புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மூவர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் அதில் ஒருவர் அதிசீவிர சிகிச்சை பிரிவிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அதிவேகமாக பயணித்த நிலையில் குழந்தை இயேசு சாந்தியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். எனினும், அவர்களில் பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மற்ற மூவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply