Home செய்திகள் முல்லைத்தீவில் சொகுசு பஸ் சாரதியால் ஒருவர் கொலை! பஸ் முதலாளி கைதானது ஏன் தெரியுமா?

முல்லைத்தீவில் சொகுசு பஸ் சாரதியால் ஒருவர் கொலை! பஸ் முதலாளி கைதானது ஏன் தெரியுமா?

பிரபல பேருந்தின் உரிமையாளர் கைது.

வவுனியா புளியங்குளம் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் பலியானார்.

குறித்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு போதைப்பொருள் பயன்படுத்தியமைக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் சாரதி அனுமதி பத்திரமும் காலாவதி ஆகியிருந்தமை தெரியவந்துள்ளது.

காலாவதியான சாரதி அனுமதி பத்திரம் உள்ள ஒருவருக்கு பேருந்தை செலுத்துவதற்கு அனுமதித்தமை தொடர்பில் குறித்த பேருந்தின் உரிமையாளர் இன்று புளியங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply