Home செய்திகள் யாழ் தெல்லிப்பழையில் கசிப்பு ஆராய்ச்சி செய்த ஆணும் பெண்ணும் கைது!

யாழ் தெல்லிப்பழையில் கசிப்பு ஆராய்ச்சி செய்த ஆணும் பெண்ணும் கைது!

சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை தெல்லிப்பளை பொலிஸார் நேற்று (19) கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தம்பயப்புலம் கிழக்கு தெல்லிப்பளை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 30 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு, 95250 மில்லி லீற்றர் கோடா, காஸ் சிலிண்டர் 2, கம்பிச்சுருள் 1, அடுப்பு மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply