Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் கார்கில்ஸ் பூட்சிற்றி இழுத்து மூடப்பட்டது!! வியாபார உரிமமும் ரத்து!! நடந்தது என்ன?

யாழில் கார்கில்ஸ் பூட்சிற்றி இழுத்து மூடப்பட்டது!! வியாபார உரிமமும் ரத்து!! நடந்தது என்ன?

காலவதியான உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் யாழ் கோண்டாவில் சந்தியில் அமைந்திருந்த கார்கில்ஸ் பூட் சிற்றியின் வியாபார உரிமையை இரத்தச் செய்யுமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  காலவதியான சொக்லேட்டுக்கள் மற்றும் பால்போத்தல்கள் உட்பட பல பொருட்கள் குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இவற்றைப் பரிசோதித்த பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறித்த விற்பனை நிலையத்திற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தனர். ஏற்கனவே குறித்த விற்பனை நிலையத்தில் இவ்வாறான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் மீண்டும் காலவதியான பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமையை நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனையடுத்தே குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபார உரிமைத்தை நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply