யாழ்ப்பாண சிறைச்சாலைக்குள் கடுமையான சித்தரவதை காரணமாக விளக்கமறியல் கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட மறுநாள் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார். இளவாளைப் பகுதியைச் சேர்ந்த 3 சிறு பெண் பிள்ளைகளின் தந்தையான 39 வயதான இராமச்சந்திரன் ஜெகன் என்பவர் தனது மனைவியை தகாத முறையில் ஏசி தாக்க முயன்ற தனது தங்கையின் கணவனை தாக்கிய காரணத்தால் கைது செய்யப்பட்டு 24.08.2026 அன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாட்களில் ஜெகன் சிறைச்சாலையில் கடுமையான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. இதன் காரணமாக ஜெகனின் உடற்பகுதியில் காயங்களும் உட்காயங்களும் காணப்பட்டு அதனால் கிருமித் தொற்று ஏற்பட்டு கடும் காய்ச்சலுக்கு உள்ளாகியதாகவும் இது தொடர்பாக ஜெகன் தன்னை சிறைச்சாலையில் பார்க்க வந்த மனைவியிடம் தெரிவித்து உடனடியாக சட்டத்தரணியை தொடர்பு கொண்டு தனக்கான சிகிச்சைக்குரிய ஏற்பாடுகளை செய்து தருமாறும் அழுதழுது கோரியுள்ளார்.
இது தொடர்பாக உடனடியாகவே மனைவி மல்லாகம் பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணியான கீர்த்தனாவிடம் முறையிட்டுள்ளார். கீர்த்தனாவே இந்த வழக்கை தொடக்கத்திலிருந்து கையாண்டு வந்துள்ளார். இருப்பினும் கீா்த்தனா ஜெகனை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த 4 தடவைகளும் நீதிமன்றத்தில் ஆயராகவில்லை எனத் தெரியவருகின்றது.
இந் நிலையில் கடந்த 16ம் திகதி மல்லாகம் நீதிமன்றத்திற்கு நடக்க முடியாது 4 சிறைக்காவலர்களால் துாக்கி வரப்பட்ட ஜெகன் பிணையில் விடுவிக்கப்பட்டான். பிணையில் விடுவிக்கப்பட்ட போது ஜெகன் இரத்தவாந்தி எடுத்ததுடன் ஆடையுடன் கருமையான நிறத்தில் மலம் வெளியேறிய நிலையில் மயக்கமடைந்து தெல்லிபழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அடுத்தநாள் 17.09.2026 ல் மரணமடைந்துள்ளார்.
ஜெகனைச் சிறைச்சாலைக்குள் வைத்து சித்திரவதை செய்தவர்கள் யார் என்பது தொடர்பாகவும் ஜெகனின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும் தனக்கான நீதி பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகவும் ஜெகனின் மனைவியான கிறிஸ்டின் ரம்யா மனித உரிமை ஆணைக்குழுவை நாடியுள்ளார். இதே வேளை அரசியல்வாதிகள், சமூகஆர்வலர்கள் சட்டத்துறையைச் சேர்ந்தவர்களும் தனக்கான நீதியை பெற்றுத் தரவேண்டும் என மன்றாட்டமாக கேட்டுள்ளார்.
இதே வேளை ஜெகனுக்காக ஆயராவதாக கூறி பணத்தைப் பெற்று அதன் பின்னர் நீதிமன்றில் ஆயராகத பெண் சட்டத்தரணி தொடர்பாக என்ன நடவடிக்கையை சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளப் போகின்றார்கள்.
சாதாரணமாகவே ஒரு தண்ணீர்ப் போத்தலை 50 ரூபா அதிகமாக வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த ஹோட்டல் ஒன்றிற்கு 9 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றங்கள் இருக்கும் போது பணத்தை வாங்கி அதற்கான சேவை செய்யாத சட்டத்தரணிகளுக்கு சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள்.
சட்டத்தரணிகளை நாடுவோர் அவர்களுக்கான கொடுப்பனவுகளை ஒருபோதும் நேரடியாகக் கொடுக்காதீர்கள். அவ்வாறு கொடுத்தால் அவர்களிடமிரு்நது பற்றுச்சீட்டை வாங்குங்கள். அல்லது அவர்களுக்கான பணத்தை அவர்களின் கணக்கு இலக்கத்திற்கு செலுத்துங்கள். அது உங்களைப் பல வழிகளில் பாதுகாக்கும. குறித்த சட்டத்தரணி பணத்தை வாங்கிய பின் உங்களுக்காக ஆயராகாவிட்டால் உயர் நீதிமன்றில் வழக்கு தொடுத்து அச் சட்டத்தரணியின் தொழில்முறை உரிமத்தை இடைநிறுத்தவோ (Suspension) அல்லது ரத்து செய்யவோ (Disbarment) சட்டத்தில் இடமுள்ளது. அத்துடன் பெரும் தொகைப் பணத்தை அந்தச் சட்டத்தரணியிடமிருந்து நட்டஈடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஜெகனின் கொடூர சித்தரவதையுடனான கொலைக்கு சிறைச்சாலை அதிகாரிகளும் பணத்தை வாங்கிய பின் நீதிமன்றிற்கு ஆயராகாத சட்டத்தரணி கீர்த்தனாவுமே காரணமானவர்கள்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















