Home செய்திகள் இலங்கை செய்திகள் அநுராதபுரத்தில் மின்னல் தாக்கி பலியான இரு பெண்களும் இவர்கள்தான்!

அநுராதபுரத்தில் மின்னல் தாக்கி பலியான இரு பெண்களும் இவர்கள்தான்!

அநூராதபுரம் நம்படகஸ்வெவ பகுதியில்
வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்!

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது திறந்த வெளிகள் மற்றும் வயல்வெளிகளில் நடமாடுவது மிகவும் ஆபத்தானது.

இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணிக்கும் பிற்பகல் 1.00 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது

ரம்பேவை, வெலியோ சந்தை பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த உறவினர்கள் மூவர், மழை காரணமாக மரம் ஒன்றின் அடியில் ஒதுங்கியிருந்த வேளையிலேயே மின்னல் தாக்கியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவரும் ரம்பேவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 61 மற்றும் 26 வயதுடைய இரண்டு பெண்களாவர்.

விபத்தில் காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply