யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்துவரும் 20 வயதுடைய குறித்த இளைஞன், நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது. நேற்று (14) மாலை பல்கலைக்கழக வளாகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்துகொண்டிருந்த வேளையில், கோப்பாய் பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
இதன்போது அவரிடமிருந்து 41 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.











