Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் தொண்டு நிறுவனத்தின் சுவற்றில் அந்தரங்க படங்களை கீறிய பின் பெருமளவு பொருட்கள், பணம் கொள்ளை!!...

யாழில் தொண்டு நிறுவனத்தின் சுவற்றில் அந்தரங்க படங்களை கீறிய பின் பெருமளவு பொருட்கள், பணம் கொள்ளை!! படையப்பா குழு காரணமா? Photos

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மடத்துவெளி பிரதேசத்தில் குறிகாட்டுவான் வீதியில் இயங்கிவருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் நேற்று முந்தினம் இரவு யன்னல் கம்பிகளை உடைத்து உட்புகுந்த திருடனால் அங்கு காணப்பட்ட சுமார் நான்கு இலட்சத்து எழுபதினாயிரம் ( 470,000 ) பெறுமதியான பொருட்களும் 75000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.
திருடுவதற்காக உள் நுழைந்த திருடன் நிலையத்தின் முகப்பு வாசல் சுவரில் ஆபாச படம் ஒன்றை வரைந்து நான்தான் படையப்பா எனக்கு யாரும்… என்றவாறு தகாத வார்த்தைகளை எழுதியுள்ளார்.
புங்குடுதீவு மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் நடைபெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தினை சேர்ந்த படையப்பா என்று அழைக்கப்படுகின்ற லிக்சாந் என்பவர் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு நான் தான் படையப்பா என்று விசித்திரமான முறையில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No photo description available.
No photo description available.No photo description available.May be an image of scooterNo photo description available.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply