யாழில் பயணிகள் உயிர்களை காப்பாற்றி தனியார் பேருந்தின் சாரதி திடீர் என மரணம் அடைந்தமை தியரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று (22/07) காலை நயினாதீவு குறிகாட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளுடன் தனியார் பேருந்தை செலுத்திச் சென்றுகொண்டிருந்தது.
இதன்போது, மண்கும்பான் சந்திக்கு அருகில்சாரதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து , சாதுரியமாக செயற்பட்ட சாரதி பேரூந்தினை அந்த உயிர்ப்போராட்டத்தின் இறுதி நொடிகளிலும், தனது பொறுப்பை மறக்காமல், பயணிகள் எவருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவாறு பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து நடத்துனரின் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இதேவேளை இவரது உடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட மருத்துவ நடவடிக்கைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது கடமையை இறுதி மூச்சுவரை கைவிடாத ஒரு பொறுப்பான சாரதியின் திடீர் மரணம் பெருந்தில் பயணித்த பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













