யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் , இரவு பேருந்துக்காக வீதியில் காத்திருந்த வேளை , அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














