Home செய்திகள் இலங்கை செய்திகள் மட்டு’வில் கலியாணமாகி 3 நாட்களிலேயே பட்டதாரியான இளம்பெண் நிரோஜனி பலி! கொலையா?

மட்டு’வில் கலியாணமாகி 3 நாட்களிலேயே பட்டதாரியான இளம்பெண் நிரோஜனி பலி! கொலையா?

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்ப அம்பிளாந்துறை கிராமத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் அம்பிளாந்துறையைச் சேர்ந்த 24 வயதான நிரஞ்சன் நிறோஜினி எனும் பல்கலைக்கழக பட்டதாரியான இளம் பெண் என தெரிவிக்கப்படுகிறது

கடந்த 16 ஆம் திகதி மகிழடித்தீவு கலாச்சார மண்டபத்தில் பெற்றோரின் ஆசியுடன் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், திருமணமாகி 3 நாட்களிலேயே குறித்த இளம்பெண் தனது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் முடிவிலேயே சம்பவத்திற்கான முழுமையான காரணம் தொடர்பான தகவல்கள் தெரியவரும்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply