Home செய்திகள் இரத்தினபுரியில் மோகன்ராஜ் பேபிஷானி எனும் தமிழ்ச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பின் நீர்தேக்கத்தில் தள்ளி கொலை...

இரத்தினபுரியில் மோகன்ராஜ் பேபிஷானி எனும் தமிழ்ச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பின் நீர்தேக்கத்தில் தள்ளி கொலை செய்தவன் பிடிபட்டது எப்படி? காட்டிக் கொடுத்த றப்பர் பட்டி!!வீடியோ

இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ தினமான சனிக்கிழமை மாலை யுவதியுடன் சென்ற இளைஞர் அப்பர் வேவல்கட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளமை ஹப்புகஸ்தன்னை தோட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்த யுவதிது கீழ் இறத்கங்க பிரிவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேபி ஷானி (20) துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள◌ார் என்றும் அதன் பின்னர் அவர் நீர்த்தேக்கத்தில் தள்ளிவிடப்பட்டாரா அல்லது குதித்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

யுவதியின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டுபிடித்ததன் பின்னர் அந்த இடத்திற்கும் சந்தேக நபர் சென்று வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அணிந்திருந்த றப்பர் கைப்பட்டி இறந்த யுவதியின் கையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நபர் யுவதியைக் காதலித்து வந்தார் என்ற விடயத்தை யுவதியின் தங்கை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேபி ஷானியைக் காதலித்து வந்த சந்தேக நபர் சம்பவ தினம் அவரை பஸ்ஸிலிருந்து இறங்கியதும் உடன் அழைத்துச் சென்றமையும் தெரியவந்துள்ளது.

தற்போது இவர் லெல்லுப்பிட்டி, பானகொடை தோட்டத்திற்குத் தப்பிச்சென்றிருப்பதாகவும் அவரைக் கைதுசெய்ய வேவல்வத்தைப் பொலிஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் மலைக்குருவிக்குத் தெரியவருகிறது.

சந்தேக நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி இன்று காலை கம்பி அடி – செட்டிக்கடை பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மிகவும் கட்டுக்கோப்பான கலாசாரத்தைப் பேணும் வேவல்கட்டி தோட்டத் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பவம் முதற்தடவையாக இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here