டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ கட்டுநாயக்காவுக்கு கொண்டுவரப்பட்டான்!
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ இன்று (9) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ‘கொண்ட ரஞ்சி’ இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோதே கடந்த ஜனவரி 09 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார். அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் அவருடன் இணைந்து அவரது மனைவியும் குழந்தைகளும் கைது செய்யப்பட்டபோதிலும், பின்னர் மனைவியும் குழந்தைகளும் விடுவிக்கப்பட்டிருந்தனர். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் படுகொலைச் சம்பவம்...
போதை பாவித்து டிப்பர் செலுத்திய சாரதியால் கிளிநொச்சியில் இளம் தாய்க்கு ஏற்பட்ட பேரவலம் : இதற்கு யார் பொறுப்புக் கூறுவது?
கடந்த 29.08.2026 அன்று கிளிநொச்சி டிப்போச் சந்தியில் உந்துருளி மீது டிப்பர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாயின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது. கையும் முறிந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறித்த சாரதி போதைப் பொருள் பாவித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர். போதை எனும் அரக்கன் ஒரு அப்பாவிப் பெண்ணினதும், அவளது பிள்ளைகளினதும் வாழ்க்கையை எவ்வாறு ஒரே நொடியில் சிதைத்துவிடுகிறது என்பதற்கு இது சான்றாக நிற்கிறது.தன் மூன்று பிள்ளைகளின் பசி தீர்க்கவும், அவர்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும் ஓடி ஓடி...
கனடாவை அதகளப்படுத்திய தமிழ் இளைஞன்!! கனேடிய பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம்!! வீடியோ
கனடா ஒன்டாரியோவின் ஸ்கார்புரோ தொகுதி ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா ஜாஹித்தின் வீட்டின் முன்பாக பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய ரோஷ்வின் கிராஃப்டன் (Roshvin Crofton) என்ற இளைஞரே டொராண்டோ பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி அதிகாலை வேளையில் இனம்தெரியாத நபர் ஒருவர், சல்மா ஜாஹித்தின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் இரண்டு வாகனங்கள் முழுமையாக...
தொலைபேசி மூலம் அழைத்து வரவழைக்கப்பட்ட மாணவி! ஒதுக்குப் புறமாக நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் வைத்து 5 இளைஞர்களுடன் தவறான தொடர்பு! திருகோணமலையில் சம்பவம்!
திருகோணமலை செருவில புனிதப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றினுள் வைத்து பள்ளி மாணவி ஒருவரைச் சிலர் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னிலையில் மாணவியை வன்புணர்ந்த சம்பவம் தொடர்பாக, சேருநுவர காவல்துறையினர் ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். பெரஹெரா திருவிழாவின் போது சிறப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த முத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு அந்த மாணவியை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அதற்குள்ளாகவே மூன்று இளைஞர்கள் மாணவியை வன்புணவுர்க்கு...
யாழ் அராலியில் அதிசயம்! பெருக்கெடுக்கும் கிணறுகள்! வீடியோ
அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளது. அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. நீர்மட்டம்...
பிருத்தானியாவில் உடற்கல்வி ரீச்சருடன் 16 வயது தமிழ் மாணவன் தவறான உறவு! விசாரணைகள் ஆரம்பம்!
இங்கிலாந்து ஆசிரியையின் சர்ச்சை வழக்கு நீதிமன்ற விசாரணை விவரங்கள் பிரித்தானியாவில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணியாற்றிய பெண் ஒருவர், தனது 16 வயது மாணவருடன் தவறான உறவில் ஈடுபட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்குத் தொடர்பான விவரங்கள் நீதிமன்ற விசாரணையின் போது வெளிவந்துள்ளன. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள பிட்டர்ன் பார்க் பள்ளியில் பணியாற்றிய 30 வயதான புரோன்வென் ஜேம்ஸ் என்ற ஆசிரியையே இந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் எட்வர்ட் கல்வர் தாக்கல் செய்த விவரங்கள்.... மாணவனின் 'Snapchat' கோரிக்கையை ஆசிரியை முதலில் நிராகரித்த போதிலும், பின்னர்...
பஸ் லலித் விசாரணையில் கக்கிய திடுக்கிடும் உண்மைகள்: மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு!
டுபாயிலிருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுவின் முக்கிய குற்றவாளியான 'பஸ் லலித்' என அறியப்படும் லலித் கண்ணங்காரவிடம் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், ஹன்வெல்ல - தித்தெனிய பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி (Pistol) ஒன்று மற்றும் ரிப்பீட்டர் ஷொட்கன் (Repeater Shotgun) ரக துப்பாக்கி ஒன்று ஆகியவற்றை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று (07) மீட்டுள்ளனர். குறித்த ஆயுதங்கள் பஸ் லலித்...
முல்லைத்தீவில் 17 வயது இளம் பெண் தவறான முடிவால் பலி!
முல்லைத்தீவைச் சேர்ந்த 17 வயதான மாணவி டினுசியா தற்கொலை செய்துள்ளார். இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.
கனடாவில் வன்முறையில் ஈடுபட்ட சிங்கள நபர் பொலிசாரால் கைது! நடந்தது என்ன?
"கனடாவில் வன்முறையில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய டொராண்டோவில் ஒரே நாளில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், வெறுப்பு உணர்வால் தூண்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் டொராண்டோவைச் சேர்ந்த 32 வயதான லக்ஷித அரத் முல்லகே என்ற நபர் கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். யூனியன் நிலையத்தில் முதலாவது சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் பாதிக்கப்பட்ட நபரை நெருங்கி சீக்கியர்களுக்கு எதிரான கருத்துக்களையும் இனவாத வார்த்தைகளையும் கூறியதுடன், கத்தியைக் காட்டி அச்சுறுத்தியதாக...
1700 போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு காவாலிகள் கைது!
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1700 போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்க்கப்பட்டது. குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் சமந்த (24220), திசாநாயக்க (74209), மிதுசன் (91800), சனத்...










