கண்டியில் சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவனுக்கு மிளகாய் தூள் பூசி சித்திரவதை!
கண்டி, மைலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயது சிறுவனுக்குச் சித்திரவதை புரிந்த சம்பவம் தொடர்பில், அதன் பாதுகாப்பாளரும் அவரது கணவரும் தலாத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் மிளகாய்ப் பொடியைத் தூவி கொடுமைப்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி கொடுமைக்குள்ளான சிறுவன் மாரஸ்ஸனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை...
வவுனியாவில் 14 வயதான மகளின் நண்பியை துஸ்பிரயோகம் செய்தவன் உட்பட சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த 3 பேருக்கு 15 வருட கடூழிய சிறை!!
பாலியல் குற்றங்கள் புரிந்த மூன்று குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் கடூழிய சிறைத் தண்டனை: வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி 16 வயதிற்குக் குறைவான சிறுமிகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ.ஆனந்தராஜா கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹிணிகம பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து 14 வயது நிரம்பிய சொந்த மகளின் நண்பியை பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு...
வவுனியாவில் அதி வேகமாக வந்த டிப்பர் சோளம் விற்கும் வீதியோர கடை மீது மோதியது! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்! வீடியோ
வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக நேற்று முன்தினம் (02.09.2026) இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மன்னாரிலிருந்து வந்த டிப்பர் வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் சோளம் விற்றுக் கொண்டிருந்தவர் மற்றும் அவரிடம் சோளம் வாங்கிக் கொண்டிருந்தவர் மீது மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சோளம் வாங்கிக் கொண்டிருந்த சாளம்பைக்குளத்தைச் சேர்ந்த ரகீம் மஜீத் (வயது 31) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சோளம் விற்ற மற்றொருவர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்...
கற்பிட்டியில் 8 மாத கர்ப்பிணிப் பெண் கணவனால் வெட்டிக் கொலை!!
புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது, கற்பிட்டி, தலவில பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஆர் பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை சம்பவத்தில் உயிரிழந்தவர், தலவில, கெலே பள்ளிய பகுதியை சேர்ந்த 26 வயதான கர்ப்பிணித் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், விரைந்து செயற்பட்ட பொலிஸார் 45 நிமிடங்களுக்குள் சந்தேக நபரைக் கண்டுபிடித்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் அவரை கைது செய்துள்ளனர். அதன்படி,...
பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் பரிதாபகரமாக பலி!
நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில்...
கிளிநொச்சியில் விபத்தில் இளைஞன் பலி!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளான். உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் குறித்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய புஷ்பராசா சமர்நிலவன் என்பவனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளான். உயிரிழந்த இளைஞனின் சடலம்ம் பிரேத பரிசோதனையின் பின்னர்...
63 வயது வெள்ளைக்காரியை படுக்க அழைத்த 3 பேர் கொழும்பில் கைது!
63 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத் திணித்த குற்றச்சாட்டின் பேரில், மூன்று இலங்கை நபர்கள் உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வருகை தந்த குறித்த பெண், உனவட்டுனவில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். தகாத உறவுக்கு அழைத்து கடிதம் தெஹிவலை மற்றும் பாணந்துறைப் பகுதிகளைச் சேர்ந்த குறித்த மூன்று சந்தேகநபர்களும், ஆஸ்திரேலியப் சுற்றுலாப் பயணி தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள...
ஆயிரம் கோடி ரூபா போதைப்பொருள் கொழும்பு துறை முகத்தில் பிடிபட்டதன் பின்னணி!! கொழும்பு தமிழ் வர்த்தகர் சசிதரன் கைது!! பிரான்ஸ் தமிழன் ரூபன் எப்போ பிடிபடுவான்!!
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையை, டுபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரேவி சுதா’ என்பவரே இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், அங்கொட பிரியந்த மற்றும் பிரான்ஸ் ரூபன் ஆகியோரும் இதனுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தற்போது சந்தேகிக்கப்பதுடன், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் மொராக்கோவிற்கு மீள்ஏற்றுமதி செய்யத் தயார் நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தபோதிலும், இந்த போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கே...
புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளில் தமிழ் மொழியில் அதி கூடிய புள்ளியாக 188 புள்ளிகள் யாழ்ப்பாணத்தில்!!
2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்தார். அத்துடன் தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இம்முறை பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள்...
துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதித்தள்ளிய கார்; கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற இந்த விபத்தில், ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக பயணித்த மகிழுந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டி சாரதி மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் காரின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










