Home செய்திகள் இலங்கை செய்திகள் பாடசாலைக்குள் புகுந்து காவாலிகளுடன் சேர்ந்து மாணவனை நையப்புடைத்தவர்கள் கைது!! பரபரப்பு காட்சிகள் வீடியோ

பாடசாலைக்குள் புகுந்து காவாலிகளுடன் சேர்ந்து மாணவனை நையப்புடைத்தவர்கள் கைது!! பரபரப்பு காட்சிகள் வீடியோ

ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறைக்குள் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் என மூன்று பேர் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களுக்கிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த விவகாரம் பாடசாலை மட்டத்தில் முடித்து வைக்கப்பட்டிருந்தது. எனினும், தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் நேற்று சனிக்கிழமை (28) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதன்போது, நீதவானின் உத்தரவுக்கமைய சந்தேகநபர்களான மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply