Home செய்திகள் இலங்கை செய்திகள் கிளிநொச்சி நகர் பகுதியில் வாள் வெட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த 2 இளைஞர்கள்!

கிளிநொச்சி நகர் பகுதியில் வாள் வெட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த 2 இளைஞர்கள்!

கிளிநொச்சி நகர் பகுதியில் வெட்டு காயங்களுடன் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பொதுச்சந்தையை அண்மித்த பகுதியில் உள்ள  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட எம் ரெக் அருகில் உள்ள விடுதி ஒன்றில் ஒப்பந்தகார்கள் தங்கியுள்ள நிலையில் பணியாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போதே, குறித்த இருவரும் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர்களுக்கிடையில் ஏட்பட்ட முரன்பாட்டினால் இருவர் வைத்தியசாலையில் மூவர் கைது!

சம்பவத்தில் காயமடைந்த குறித்த இருவரும் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply