தனது பாடசாலை நண்பியை சந்திப்பதற்காக பிரான்சிலிருந்து ஜேர்மனி சென்ற யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 38 வயதான அருளானந்தம் பிரகாஸ் என்பவர் மீது ஜேர்மன் டார்ட்முண்ட் (Dortmund) நகர்ப் பகுதி ரயில் நிலையத்தில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் பிரகாஸ் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது நண்பியைச் சந்தித்த பின் அவரது காரில் பயணம் செய்து (Dortmund Hbf ரயில் நிலையத்திற்கு அருகே இறங்கி அருகில் இருந்த உணவகம் ஒன்றுக்குச் செல்லும் போதே குறித்த காரைப் பின் தொடர்ந்து வந்தவர்களால் பிரகாஸ் தாக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதல் சம்பவத்தை தனது கணவரின் அடியாட்களே மேற்கொண்டதாக பிரகாஸ் நண்பி பொலிசாருக்கு முறைப்பாடு கொடுத்துள்ளார். பிரகாஸ் யாழ்ப்பாணத்தில் கல்விகற்கும் போது கொக்குவில் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் பிரகாஸ் மற்றும் நண்பியும் கல்வி கற்று வந்ததாகவும் அந்த நட்பு வெளிநாட்டிலும் தொடர்ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
பிரகாசின் நண்பி ஜேர்மனியில் கடந்த 4 மாதங்களாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














