சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த 41 வயதான 3 பிள்ளைகளின் தாயார் தற்போது சித்தசுவாதினமற்ற நிலையில் சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ் மயிலிட்டிப் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தனது பெற்றோரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக கடந்த வருட தொடக்கத்தில் குறித்த குடும்பப் பெண்ணும் கணவனும் யாழ்ப்பாணம் வந்துள்ளார்கள். வீட்டு அத்திவார வேலைகளை முடித்துக் கொண்டு கணவன் சுவிஸ் சென்றுவிட மனைவி யாழ்ப்பாணத்தில் தனது உறவுகளுடன் நின்று வீடு கட்டும் வேலையை மேற்பார்வை செய்து வந்துள்ளார்.
இந் நிலையில் கடந்த சிவ மாதங்களாக மனைவியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதை கணவன் அவதானித்ததுடன் தனது தொலைபேசி அழைப்புக்கும் மனைவி பதிலளிக்க முடியாது இருந்ததையடுத்து மனைவியின் உறவினர்களை தொடர்பு கொண்டுள்ளார்.அவர்கள் மனைவியின் நிலையை நேரடியாகச் சொல்லாமல் அவளுக்கு யாரோ செய்வினை செய்துள்ளார்கள் என கூறி கணவனை யாழ்ப்பாணம் வருமாறு அழைத்துள்ளார்கள். சுவிஸ்லாந்திலிருந்து வந்த கணவன் தனது மனைவி அரை குறை சித்தசுவாதினமுடையவராக மாறியுள்ளதை அவதானித்துள்ளார். அவர் தனது மனைவியின் உறவுகளின் ”செய்வினை, சூனியக் கதையைக் கேட்டு யாழ் மடத்தடிப்பகுதியில் உள்ள சாமியாரிடம் அழைத்துச் சென்றதாகவும் ஆனால் அப்போதும் நிலைமை சரி வராததால் நண்பன் ஒருவனின் ஆலோசனையில் மனநலம் சார்ந்த வைத்தியர் ஒருவரிடம் மனைவியைக் காட்டிய போதே மனைவியைப் பரிசோதித்த மருத்துவர் குறித்த பெண் ஐஸ் போதைக்கு அடிமையாகியுள்ளதாக கூறியதால் கணவன் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின்ன கணவன் மற்றும் உறவுகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது மயிலிட்டிப் பகுதியில் மேற்கொண்ட வீடு நிர்மானப் பணிகளின் போது அங்கு வேலை செய்ய வந்த கட்டடத்தொழிலாளிகள் மூலமாக மனைவி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானது கண்டு பிடித்துள்ளார்கள். அத்துடன் மனைவி குறித்த தனது வீட்டில் கட்டடத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதைக்கு அடிமையான மாவட்டபுரம் பகுதியில் உள்ள வைரவர் கோவில் சுற்றாடலில் வசிக்கும் சில இளைஞர்களுடன் தன்னை மறந்த நிலையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதையும் கண்டு பிடித்துள்ளார்கள்.
தற்போது மனைவியை கணவன் தனது நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. அவளது நகைகள் மற்றும் பணம், பெறுமதி மிக்க கைத்தொலைபேசி போன்றவை குறித்த இளைஞர்களிடம் உள்ளதாகவும் அவற்றை மீட்க முற்பட்ட போது அவர்கள் மனைவியின் நடத்தை தொடர்பான சில வீடியோக்களை காட்டி கணவனை அச்சுறுத்தியதாகவும் மனைவியே பிழை விட்டதாகவும் கூறியதுடன் பொலிசாரிடம் சென்றால் தமத தரப்பு நியாயங்களை அப்பகுதியைச் சேர்ந்த அனைவரும் சேர்ந்து பொலிசாருக்கு கூறுவோம் என இளைஞர்களுடன் அவர்களைச் சேர்ந்தவர்களும் வெருட்டியதால் கணவன் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பெண்ணின் காணியில் கட்டடத் தொழில் செய்தவர்கள் அப் பெண்ணுக்கு செவ்விளநீரில் போதைப்பொருளைக் கொடுத்து அவளை அதற்கு அடிமையாக்கியே சித்தசுவாதினமடையச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














