Home செய்திகள் இலங்கை செய்திகள் கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்சில் 14 வயதுச் சிறுமி மீது சேட்டை புரிந்த சிப்பாய்க்கு...

கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்சில் 14 வயதுச் சிறுமி மீது சேட்டை புரிந்த சிப்பாய்க்கு நடந்த கதி!

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பஸ் வண்டியில் 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் சேட்டை புரிந்த புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் ஒருவரை நேற்று (23) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

இராணுவ சிப்பாய் மீது தாக்குதல்
கடந்த 20 ம் திகதி பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியில் 14 வயது சிறுமி அவரது சிறிய தந்தையுடன் வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்வதற்காக பயணித்துள்ளார்.

அதேவேளை புனாணை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீடு சென்று திரும்பியவர் அதே பஸ் வண்டியில் ஏறி சிறுமிக்கு அருகில் அமர்ந்து கொண்ட நிலையில் பஸ்வண்டி மன்னம்பிட்டியை தாண்டி சென்று கொண்டிருந்தபோது குறித்த இராணுவ சிப்பாய் சிறுமி மீது பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட நிலையில் சிறுமி அருகில் இருந்த சிறிய தந்தையிடம் முறையிட்டதையடுத்து அவர் அந்த இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதனையடுத்து பஸ்வண்டியை சாரதி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று நிறுத்தி பஸ்வண்டியில் நடந்த சம்பவத்தை தெரிவித்ததையடுத்து பொலிசார் தாக்குதலுக்கு உள்ளான இராணுவ சிப்பாயை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலை மேற்கொண்ட சிறுமியின் சிறிய தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இது தொடர்பாக விசாரணை மேற் கொண்டுவந்த பொலிசார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் நோய் குணமாகி வைத்தியசாலையில் இருந்து வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு வெளியேற முற்பட்டபோது அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை இன்று (24) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply