ஒரு கிலோ கீரிச் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாய் என்று – அரசு நிர்ணயித்துள்ளது.
இந்த நிலையில், இரண்டு கிலோ கீரிச் சம்பாவை 800 ரூபாய்க்கு அக்கரைப்பற்றில் விற்ற – வியாபாரியொருவர், நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் அகப்பட்டார்.
அதாவது, ஒரு கிலோ அரிக்கு 140 ரூபாய் அதிக விலை வைத்து விற்றுள்ளார்.
அவரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் – அதிகாரிகள் ஆஜர் செய்தபோது, அவருக்கு 01 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சட்டத்துக்குப் புறம்பாக 280 ரூபாய் கொள்ளை லாபம் பெற்றுக் கொள்ள முயற்சித்ததால், அந்த வியாபாரிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சின்ன ஆசை – பெரிய நஷ்டம்.
பொதுமக்கள் பொருட்களை வாங்கும் போது, அந்தப் பொருளின் சில்லறை விலை எவ்வளவு என்று பார்த்து வாங்குமாறு, நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
அதிக விலைக்கு விற்றால், அதற்கான ‘பில்’லை பெற்றுக்கொண்டு, அது தொடர்பில் 1977 எனும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு முறையிடுமாறும் அதிகாரசபை கூறியுள்ளது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















