Home செய்திகள் கனடாவில் வசித்து வந்த மனோகரன் வவுனியாவுக்கு வந்த போது மரணம்! காரணம் எ்ன்ன?

கனடாவில் வசித்து வந்த மனோகரன் வவுனியாவுக்கு வந்த போது மரணம்! காரணம் எ்ன்ன?

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார்.
வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதுஇ அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த வாகன சாரதி, உடனடியாக அவரை பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
May be an image of text that says "Health Santé MANOGARAN MANOGARANPONNIAH PONNIAH 2769- 2769-951 951 -530 2769-951-530-C -530-CV CV 1954 1954-02-17 2022-09 09 01 2027 Ontario Driver's Licence Permis de conduire ON CANADA SMEL: PONNIAH, MANDGARAN 2005-2050 BRIDLETOWINE CIR SCARBOROUGH ON M1E 2V5 WJMBES P6421 51605 -40217 2023/02/27 式使茶 2028/0513 HR1266902 KиoToHи 166cm 166 cm PA D2ckt0 1954/02/17 10545217"May be an image of acupuncture and hospital
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply