யாழில் கிணற்றில் தவறி விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (01-05-2026) இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாகப் பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














