Home செய்திகள் யாழில் பிரான்ஸ் மாப்பிளையை ஏமாற்றிய அத்தான்! பெண் கர்ப்பம்! நகைகள், காணிஉறுதி போலி!

யாழில் பிரான்ஸ் மாப்பிளையை ஏமாற்றிய அத்தான்! பெண் கர்ப்பம்! நகைகள், காணிஉறுதி போலி!

கடந்த வருடம் நவம்பர் மாதம் பிரான்ஸ்சிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் ஊரழு பகுதியில் 34 வயதான சுரேஸ் ( பெயர் மாற்றம்) ஒருவர் 27 வயதான ரேவதி (பெயர் மாற்றம்) கரம் பிடித்திருந்தார். திருமணம் புறோக்கர் மூலமாக பேசியே நடைபெற்றுள்ளது. சுரேசின் பெற்றோர் இறந்துவிட்டனர்.யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த சுரேசின் அக்காவே குறித்த திருமணத்தை பேசி முடித்திருந்தார். சுரேஸ் சீதனம் தேவையில்லை என அக்காவிடம் கூறி மணமகள் பார்க்க சொன்ன போதும் அதற்கு சம்மதிக்காத அக்கா சீதனத்துடன் மணமகளை தேடத் தொடங்கியிருந்தார். இந் நிலையிலேயே ஊரெழு பகுதியில் வசிக்கும் ரேவதியை நிச்சயம் பண்ணியுள்ளார். அத்துடன் தனது தம்பி சீதனம் தேவையில்லை என கூறியுள்ளான். ஆனால் நீங்கள் ரேவதியின் தாலிக்கொடிக்குரிய பணத்தையும் அவளுக்கு உங்களால் கொடுக்க கூடிய காணி ஏதாவது இருந்தால் கொடுக்குமாறும் மணமகளின் வீட்டாரிடம் தெரிவித்திருந்தார். தந்தை இறந்த நிலையில் தனது தாயுடன் தனது மூத்த சகோதரிக்கு கொடுத்த வீட்டிலேயே ரேவதி வசித்துள்ளார். ஆனால் அவளுக்கு அந்த வீட்டுடன் சேர்ந்து 3 பரப்பு காணி இருந்துள்ளது. ஆகவே ரேவதியின் தாயார் தனது மகளுக்கு காணியும் தாலிக்கொடி செய்வதற்கான பணத்தையும் சீதனமாகக் கொடுப்பதற்கு சம்மதித்துள்ளார்கள். 7 பவுணில் தாலி செய்வதற்கான பணத்தைக் கொடுப்பதற்கும் உறுதி செய்தார்கள். இவ்வாறான உறுதிப்பாட்டுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு சுரேஸ் பிரான்சில் இருந்து வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் மணமகளுக்கு 15 பவுணில் தாங்களே தாலி தயாரித்து கொடுப்பதாக ரேவதியின் அக்காவும் அத்தானும் சுரேசின் சகோதரிக்கு திடீரென கூறியுள்ளார்கள். அதற்கும் சரி என சகோதரி ஒத்துழைத்துள்ளார். சுரேஸ் வீட்டில் நடந்த பொன்னுருக்கு நிகழ்வுக்கு ரேவதி வீட்டாரின் ஆசாரியே வந்து பொன்னுருக்கும் செய்துள்ளார். இதன் பின்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது ரேவதி 5 மாத கர்ப்பிணி. மணமகள் மாப்பிளையின் அக்கா வீட்டிலேயே தங்கியுள்ளார். இவ்வாறான நிலையில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக சுரேசின் அக்காவும் ரேவதியும் சேர்ந்து சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பி வரும் போது ரேவதியின் தாலிக்கொடியில் வித்தியாசமான மாற்றங்களை சுரேசின் அக்கா அவதானித்துள்ளார். வீடு வந்து அந்த தாலிக்கொடியை கழட்டிப் பரிசோதித்த போது அது மிகவும் தரங்குறைந்த கவரிங் தாலிக்கொடி என்பதை அறிந்து அதிர்ந்துள்ளார்கள். உண்மையில் இது ரேவதிக்கும் தெரியாது என ரேவதி அதிர்ச்சியடைந்ததாக தெரியவருகின்றது. இது தொடர்பாக தனது அக்காவிடம் கேட்ட போது அவர்கள அதற்கு சரியான பதிலை வழங்கவில்லை. தாங்கள் சரியான முறையில் தாலி செய்து போட்டதாக கூறியுள்ளார்கள். பொன்னுருக்குக்கு வநத ஆசாரியை அவர்கள் விசாரித்த போது தன்னை தாலி மாத்திரமே செய்ய சொன்னதாகவும் அதுவும் 18 கரட்டிலும் குறைவானது போல் செய்ய சொல்லி அவர்கள் உத்தரவிட்டதாகவும் ஆசாரி கூறியுள்ளார்.

இதனையடுத்து ரேவதியின் சகோதரி உட்பட்டவர்களை பொலிசாரிடம் முறையிட முயன்ற போதே கூட்டு வெளிப்பட்டுள்ளது. ரேவதியின் தாயார் நகைகள் செய்யவும் திருமணத்திற்கு எனவும் ரேவதியின் அக்காவுக்கு கொடுத்த பணத்தை அக்காவின் கணவன் சூறையாடிய பின்னர் போலி நகைகளை செய்து கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அதே நேரம் ரேவதிக்கு எழுதிக் கொடுத்த காணியும் ஏற்கனவே 30 லட்சம் ரூபாய்களுக்கு ஈடு வைக்கப்பட்டுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, இதுவும் ரேவதியின் தாயாரையும் ரேவதியையும் ஏமாற்றி ஈடு வைக்கப்பட்டதாக தெரியவருகின்றது. ரேவதியின் தாய் ரேவதியின் அக்காவுக்கு கொடுத்த சீதுன வீட்டை தான் இறக்கும் வரை தனக்குத்தான் சொந்தம் என்றும் இறந்த பின்னரே ரேவதியின் அக்காவுக்கு சொந்தமாகும் என எழுதியுள்ளார். அதனால் அந்த வீட்டை ஈடு வைப்பதற்கு கட்டாயம் தாயாரின் கையெழுத்து தேவை எனக்கூறி ரேவதிக்கு என இருந்த காணியை மட்டும் அத்தான் ஈடுவைத்துள்ளதும் அப்போதே தெரிய வந்துள்ளது.

ரேவதியின் அத்தான் டிப்பர் ஒன்றின் சாரதியாக இருநு்தவன் என்றும் தற்போது 2 டிப்பர்களுக்கு உரிமையாளனாக உள்ளதாகவும் அத்துடன் பல தடவைகள் கள்ளமண் ஏற்றி தண்டப்பணம் கட்டி டிப்பர்களை மீட்டு வந்தவன் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வெளிநாட்டு மாப்பிளைகளே திருமணம் செய்யும் போது அவதானமாக இருங்கள்…

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply