Home செய்திகள் இலங்கை செய்திகள் நுவரேலியாவில் தமிழ்த் தம்பதிகளை கொன்றவன் பிடிபட்டது எப்படி? வீடியோ

நுவரேலியாவில் தமிழ்த் தம்பதிகளை கொன்றவன் பிடிபட்டது எப்படி? வீடியோ

டிக்கோயா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று சனிக்கிழமை 04.30 அளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் வயோதிப தம்பதினர் இருவரையும் 21ம் திகதி கொலை செய்துவிட்டு உறவினர்களின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொகவந்தலாவ பொலிஸார் குறித்ந சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர் பதுளை பகுதியை சேர்ந்தவர் எனவும் கொழும்பு பகுதியில் வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த கெம்பியன் பகுதியை சேர்ந்த பெண்ணோடு தொடர்பு வைத்திருந்து அப்பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்
சம்பவம் தொடர்பில் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
82 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் 82 வயதான அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோரே இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டனர் .
படுகொலை செய்யப்பட்ட தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வந்த நிலையில் இந்த தம்பதியினர் நீண்ட காலமாக குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அண்மைக் காலமாக அந்த வர்த்தக நிலைய செயற்பாடுகளை மூடிவிட்டு, இருவரும் அங்கு தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
May be an image of one or more people, people smiling and grassMay be an image of lighting and jeepMay be an image of one or more people, temple, crowd, the Charminar and textMay be an image of one or more people and people smiling
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply