‘கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்’ என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர், நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இன்றைய தினம் நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபர் பயணிகள் படகை தவறவிட்டமையால் , கடற்தொழிலாளர்களின் சிறிய படகில் குறிகட்டுவான் நோக்கி வரும் போது கடற்சீற்றம் காரணமாக படகு கடலில் அடிபட்டதில் படகில் இருந்து தவறி கடலினுள் விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
அதிபர் நயினாதீவை சேர்ந்தவர். அவர் கொழும்பு போவதற்காக யாழ்ப்பாணம் வரும் போதே அனர்த்தம் ஏற்பட்டது.
கடல்பயணங்கள் ஆபத்தானவையே .. அவை ஆசிரியர்களுக்கு மாத்திரமின்றி , ஏனைய உத்தியோகஸ்தர்களுக்கும் அப்பகுதி மக்களுக்குமே ..
பாதுகாப்பான கடற்பயணங்களை உறுதி செய்ய வேண்டும்.
இறங்குதுறைகளில் கடற்படையினர் கண்காணித்து , படகில் இத்தனை பேர் தான் ஏற முடியும் என்பதனையும் , அனைவரும் , பாதுகாப்பு அங்கி அணிய வேண்டும் என்பதும் கட்டாயம் என்பதனை அறிவுறுத்துகிறார்கள். அத்துடன் படகின் மேற்கூரையில் அமர அனுமதிப்பதும் இல்லை.
ஆனால் படகு பயணிக்க தொடங்கி சில நிமிடங்களில் பாதுகாப்பு அங்கிகளை கழட்டி போட்டு விட்டு , படகின் மேற்கூரைக்கு வந்து விடுவார்கள்.
பயணங்கள் பாதுகாப்பாக அமைய நாமும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.


நன்றி ஊடகவியலாளர் மயூரன்
நயினாதீவு பாடசாலை அதிபரின் மர*ணத்தின் முழுப் பொறுப்பை வடக்கை நிர்வகிப்பவர்களும் அதிகாரிகளும் தான் ஏற்க வேண்டும்.
பிரதேச சபை உறுப்பினர் துவாரகன் ஏற்கனவே வட மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்த கோரிக்கை தொடர்பில் ஆளுநர் செயலகம் அனுப்பிய கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டது போன்று இடம்பெறுகிறதா என்பது தான் கேள்வி?
நன்றி
ஊடகவியலாளர்
வர்ணன்

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













