Home செய்திகள் இலங்கை செய்திகள் பிரான்ஸ் செல்லவிருந்த அருணவன், பொறியியல் பீடமாணவன் தனேஸ் ஆகியோர் கோர விபத்தில் பலி!!

பிரான்ஸ் செல்லவிருந்த அருணவன், பொறியியல் பீடமாணவன் தனேஸ் ஆகியோர் கோர விபத்தில் பலி!!

திருகோணமலை மாவட்டம், மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் – ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று (02) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மூதூர் – கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவரும், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த இளைஞரும் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்தையடுத்து ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
May be an image of text that says "கண்ணீர் அஞ்சலி தமிழ்செல்வம் தனேஸ் வாழ்வில் உன் பயணம் இங்கு நிறைந்தது... ஆனால் எங்கள் நினைவுகளில் நீ என்றும் நிலைத்திருப்பாய்... உன் பிரிவு எங்களுக்கு பேரிழப்பு... உன் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். உன் நினைவு எங்கள் உள்ளத்தில் என்றும் வாழும்"May be an image of one or more people, beard and people smilingNo photo description available.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply