Home செய்திகள் இலங்கை செய்திகள் தமிழர் பிரதேசத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதியதில் ஒருவர் பலி!

தமிழர் பிரதேசத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதியதில் ஒருவர் பலி!

கல்முனையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதியதில் ஒருவர் பலி

அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் இன்று மாலை (02.08.2026)ஆம் திகதி இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்

​மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பொலிரோ ரக வாகனம் ஒன்று, கல்முனை தாழவட்டுவான் சந்திக்கு அருகாமையில் பயணித்தபோது சாரதிக்கு ஏற்ப்பட்ட திடீர் சுகயீனத்தால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த அவ்வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த அபிவிருத்தி லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

​இந்தக் கொடூர விபத்தில் லொத்தர் விற்பனை நிலையத்தின் தூண்கள் பலத்த சேதமடைந்து கடை தரைமட்டமாகியுள்ளதுடன், தலைகீழாகப் புரண்டுள்ளது.

​இவ்விபத்தின் போது பொலிரோ வாகனத்தின் சாரதியும், லொத்தர் விற்பனை செய்யும் கடையில் இருந்தவரும் படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலன்னறுவையைச் சேர்ந்த வொலிரோ வாகனச் சாரதி உயிரிழந்துள்ளார்

​​இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

May be an image of skateboard, golf buggy, jeep, van and textNo photo description available.May be an image of money and textMay be an image of one or more people

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply