Home செய்திகள் இலங்கை செய்திகள் போதைப்பொருளுக்கு அடிமையான 9A எடுத்த யாழ் இந்துக்கல்லுாரி மாணவனால் அம்மம்மா வெட்டிக் கொலை!!

போதைப்பொருளுக்கு அடிமையான 9A எடுத்த யாழ் இந்துக்கல்லுாரி மாணவனால் அம்மம்மா வெட்டிக் கொலை!!

போதைப்பொருளுக்கு அடிமையான யாழ் இந்துக்கல்லுாரி மாணவனால் அம்மம்மா வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தூர் சிவன் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே அம்மம்மா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்மம்மாவுடன் இருந்த  குறித்த மாணவன் ஓ.எல் இல் 9 ஏ எடுத்துள்ளான். போதைப்பொருளுக்கு அடிமையாகி விட்டான் எனத் தெரிந்தவுடன் யாழ் இந்துக்கல்லுாரி அதிபர் செந்தில்மாறன் உடனடியாக குறித்த மாணவனையும் அவனுடன் சேர்ந்திருந்து ஏனைய சில மாணவர்களையும் பாடசாலையை விட்டே துரத்தி விட்டதாகத் தெரியவருகின்றது. இவ்வாறான நிலையில் குறித்த மாணவனை பெற்றோர் தனியே வசித்து வந்த அவனது அம்மம்மாவுடன் சேர்ந்து இருக்க வைத்தள்ளார்கள். அம்மம்மாவின் ஏனைய பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளார்கள். இவ்வாறு அம்மம்மாவுடன் இருந்த குறித்த போதைப்பொருள் காவாலியான மாணவன் போதைப்பொருள் வாங்க அம்மம்மாவிடம் பணம் கேட்டும் அவர் கொடுக்காத காரணத்தால் அவரை கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply