யாழ்ப்பாணம், கொடிகாமம் – மீசாலை வடக்கு, புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்து நிறுத்தியதுடன், அவற்றின் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (14) இரவு சுமார் 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம், கெற்பேலி பகுதியில் இருந்து மூன்று டிப்பர் வாகனங்கள் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்வதாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர், மீசாலை – புத்தூர் வீதியில் பூதவராயர் கோவில் பகுதியில் குறித்த டிப்பர் வாகனங்களை வழிமறித்துள்ளனர்.
எனினும், அதிரடிப்படையினரின் சமிக்ஞைகளை பொருட்படுத்தாத டிப்பர் வாகனங்கள், அதிரடிப்படையினரின் வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து டிப்பர் வாகனங்களின் சில்லுகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, இரண்டு டிப்பர் வாகனங்களையும் தடுத்து நிறுத்திய விசேட அதிரடிப்படையினர், அவற்றின் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















