Home செய்திகள் யாழில் நள்ளிரவு வீடு புகுந்து கதறக் கதற பெண் கொலை!

யாழில் நள்ளிரவு வீடு புகுந்து கதறக் கதற பெண் கொலை!

யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அலறல் சத்தம்
புத்தூர் மேற்கில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் குறித்த பெண் தனியாக வசித்து வந்துள்ளதோடு, இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து, அருகாமையிலுள்ள வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்கு சென்று பார்த்தபோதே, அப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக உடனடியாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறியவும் அச்சுவேலி பொலிஸார் தீவிர விசாரணைகளைில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply