Home செய்திகள் யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்!

யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்!

பொன்னாலைக் கடலில் தொழிலுக்கு சென்ற.குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
பொன்னாலையை சேர்ந்த நாகு கிருஷ்ணமூர்த்தி {வயது 62} என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
டித்வா புயல் மற்றும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக எவரையும் கடற்றொழிலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்றுக் காலை கடற்றொழிலுக்கு சென்று திரும்பிய இவர் மீ்ண்டும் பிற்பகல் 3.00 மணியளவில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமற் போயிருந்தார்.
6 மணியாகியும் அவர் கரை திரும்பாத நிலையில் உறவினர்களும் சக தொழிலாளர்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்டனர்.
இதன்போது இன்று காலை 10.00 மணியளவில் கடலில் இவரது சடலம் மீட்கப்பட்டது.
பிற்பகல் 2.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மல்லாகம் நீதிமன்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்று உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட.நீதிவான் சடலத்தை புதைக்குமாறும் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ரி.பவானந்தராஜா சடலத்தை பார்வையிட்டுச் சென்றிருந்தார்.
May be an image of fishingMay be an image of one or more peopleMay be an image of one or more people and crowd
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply