உந்துருளிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று சிறுப்பிட்டிப் பகுதியில் இன்று அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்தது.
யாழ். நகரிலிருந்து பருத்தித்துறைக்கு உந்துருளிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனமே விபத்தில் சிக்கியுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது எனக் கூறப்படும் இந்த விபத்தின்போது வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளான போதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா? அல்லது சாரதியின் நித்திரைத் தூக்கத்தால் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













