Home செய்திகள் முல்லைத்தீவில் உள்ளதைப் போல் யாழில் செய்ய முடியாதா?

முல்லைத்தீவில் உள்ளதைப் போல் யாழில் செய்ய முடியாதா?

இது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள ஆண், பெண், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் தனித்தனி பொது கழிப்பிடம்.

இதை மாவட்ட செயலகம் அமைத்திருப்பதாகவும் அங்கே ஒரு அறிவித்தல் பலகையும் காணக்கிடைக்கிறது.

முறிகண்டியில் இருப்பது போல காவலாளியோ / கட்டண கோரல் கூட அங்கில்லை.

சிறப்பான பராமரித்தலோடு காணப்படும் இத்தகைய கழிப்பிட வசதி, யாழ்ப்பாணத்தில் அதிக மக்கள் கூடும் எந்த ஆலய சூழலிலும் காணக்கிடைக்காது.

ஆலயங்களில் மட்டுமல்ல ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளாலும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுதல் வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல உள்ளூர் மக்களுக்கும் இவற்றின் தேவையுள்ளது.

யாழ்ப்பாண நகரத்துக்கு வருவோர் சிறுநீர் கழிக்க கார்கில்ஸ் / கீல்ஸ் செல்லவேண்டியிருப்பது யாழ் மாநகரசபையின் இயலாமை அல்லவா?

இன்றைய நல்லூர் பிரதேச சபையின் தீர்மானத்துக்கு மாற்றீடாக, அந்த இடத்தில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய நன்றாக பராமரிக்கப்படும் நிலையில் பொது கழிப்பிடங்களை (கட்டணம் அறவிட்டாலும் பரவாயில்லை) அமைத்து அதை நிர்வகிக்க சபையால் நடவடிக்கை எடுக்க முடிந்தால் அது சிறப்பான செயல்.

இலவச கழிப்பிடங்களாக ஆலயமே பராமரித்தால் அது இன்னமும் சிறப்பான செயல்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here